Monday, May 15, 2023
ஒதிய மரத்து வயல்
தஞ்சாவூர் மாவட்டம் டெல்டா பகுதி வயல் வெளி நிறைஞ்ச பகுதி குறைஞ்ச பட்சம் ஒரு வயல் 2 செண்ட்ல இருந்து 1 ஏக்கர் வரைக்கும் இருக்கும். இதுல ஒவ்வொரு வயலுக்கும் ஒரு பேரு வச்சு இருப்போம். ஒரு ஊர்ல 100 ஏக்கர் விவசாய நிலம் இருந்தாலும் எத்துனை வயல் இருந்தாலும் அவ்வளவுக்கும் ஒரு பேர் உண்டு. மனுசனுக்கு பேர் வச்சு அழைக்கிற மாதிரி வயலுக்கும் பேர் சொல்லித்தான் அடையாளம் வச்சுக்குவோம். ஆத்தங்காடு, சுப்பன் வயல், நெடுந்துண்டு, உம்பளம், பனைமரத்துத்துண்டு, கடைசிப்பாலம், நாத்தங்கா, சிவராங்கொல்லை
இப்படி எங்க வயல் ஒன்னோடுபேரு ஒதிய மரத்து வயல் பல வருசமா இந்த வயலோட வரப்புல ஒதிய மரம் இருந்ததால இந்த வயலுக்கும் ஒதிய மரத்து வயல்னு பேர வச்சு எங்க தாத்தா கலத்தில இருந்து சொல்லி அழைச்சுக்கிட்டும் அந்த வயலோட அடையாளமாகவும் இருந்தது இந்த ஒதிய மரம். இப்ப இந்த மரம் வயசானுதால இப்ப பட்டுப்போச்சு.. இந்த முறை ஊருக்குப் போயி இருந்தப்ப இதைப் பார்த்த உடனே மனசு ரொம்ப கஸ்டமாயிருச்சு... ஆனாலும் இந்த மரம் பட்டுப்போனதால இதை வெட்டினாலும் இனி காலம் உள்ள வரைக்கும் இந்த வயலோட அடையாளாம் ஒதிய மரத்து வயல் தான்
Subscribe to:
Posts (Atom)








